/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : நவ 13, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மாரிமுத்துவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து 52, கூலித்தொழிலாளி. இவர் 2023 மே மாதம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாரிமுத்துவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.