/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பு
/
சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பு
ADDED : மே 17, 2025 11:57 PM
காரியாபட்டி: -காரியாபட்டி பகுதியில் ஒரு வாரமாக சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
காரியாபட்டி பகுதியில் இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு சான்றிதழ்கள், வருவாய் ஆவணங்கள், ஆதார், பான் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் இ சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு வாரமாக சர்வர் பழுது காரணமாக சரிவர செயல்படவில்லை.
தற்போது பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளில் சேர பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டி இ சேவை மையங்களை அணுகுகின்றனர். உரிய நேரத்தில் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்கிற பதட்டத்தில் அங்கும் இங்கும் அலைகின்றனர். சர்வர் பழுது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் துவக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இ சேவை மையம் இருந்தது. தற்போது ஏராளமான இ சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த சர்வர் மூலமாக இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இ சேவை மையங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்வரின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். இன்னும் பழைய சர்வரிலே அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே இ சேவை மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சர்வர் அல்லது கூடுதல் இணையதள சேவை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.