/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சியில் கலங்கல் குடிநீர் வினியோகம்: நோய் அச்சம்
/
நகராட்சியில் கலங்கல் குடிநீர் வினியோகம்: நோய் அச்சம்
நகராட்சியில் கலங்கல் குடிநீர் வினியோகம்: நோய் அச்சம்
நகராட்சியில் கலங்கல் குடிநீர் வினியோகம்: நோய் அச்சம்
ADDED : ஜன 09, 2024 12:51 AM

விருதுநகர், : விருதுநகரில் வினியோகிக்கப்படும் கலங்கல் குடிநீரால் நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. விருதுநகர் நகராட்சியிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் உள்ளூர் ஆதாரங்கள் மூலமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் துவங்கிய நிலையில் 2 நாட்களாக பட்டுத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலங்கல் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகராட்சிக்கு ஆனைக்குட்டம் 30 லட்சம் லிட்டர், ஒண்டிப்புலி 10 லட்சம் லிட்டர், தாமிரபரணி 20 லட்சம் லிட்டர் குடிநீர் என 60 லட்சம் லிட்டர் குடிநீர் 36 வார்டுகளிலும் வினியோகிக்கப்படுகிறது.
சில வார்டுகளில் கலங்கல் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் நீர் மூலம் ஏற்படும் நோய்கள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.நீ.ம., மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், கலங்கலான குடிநீர் வினியோகத்தால் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீரை வினியோகிக்க வேண்டும், என்றார். நகராட்சி தலைவர் மாதவன் கூறியதாவது: வடிகிணறுக்கு மேல் தண்ணீர் செல்வதால் இந்த நிலை உள்ளது. முடிந்தளவு சுத்தமான குடிநீரை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.