/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.48.29 லட்சம் மோசடி இருவர் கைது
/
ரூ.48.29 லட்சம் மோசடி இருவர் கைது
ADDED : மார் 21, 2024 02:15 AM

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துாரைச் சேர்ந்தவர் அங்குராஜ். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் இந்திய ஓட்டல்களுக்கு விமர்சனம் கொடுத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி லிங்க் அனுப்பினர்.
அதற்கு பணம் செலுத்துமாறு கூறினர். இதை நம்பி அங்குராஜ் பல வங்கி கணக்குகளுக்கு ரூ. 48 லட்சத்து 29 ஆயிரத்து 310 செலுத்தினார். ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை.
விருதுநகர் சைபர் கிரைம் போலீசில் அங்குராஜ் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் திருவில்லிக்கேணியைச் சேர்ந்த ஏஜாஸ்கான் 43, தஞ்சாவூரைச் சேர்ந்த ரிஸான் அஹமது 23, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் 30 அலைபேசிகள், 55 சிம்கார்டுகள், 44 வங்கி காசோலைகள், 36 பாஸ்புக், 7 பாஸ்போர்ட், 7 பான் கார்டுகள், 6 ஒ.டி.பி., மிஷின்கள், கார் பறிமுதல் செய்து வங்கி கணக்கில் இருந்த ரூ.28 லட்சம் முடக்கினர்.

