ADDED : செப் 30, 2024 04:23 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சின்ன கட்டங்குடியைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் 41, இவர் செப். 24ல், டூவீலரில் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்புவதற்காக மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக டூவீலரில் வந்த இருவர் ஜீவரத்தினம் அணிந்த 15 பவுன் தாலிச் செயினை பறித்தனர்.
செயினை ஜீவரத்தினம் பிடித்துக் கொண்டதால், பத்தரை பவுன் மட்டும் திருடர்கள் கையில் சிக்கியது. அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த நிலையில், மதுரை -- துாத்துக்குடி ரோட்டில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக டூவீலரில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருச்சுழி அருகே சொக்கம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் 30, முத்துராஜா 22, என்பதும் பெண்ணிடம் நகை பறித்தவர்கள் எனவும் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

