/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்வேலியில் சிக்கி பலியான இருவரின் சடலங்களை கிணற்றில் வீசிய இருவர் கைது
/
மின்வேலியில் சிக்கி பலியான இருவரின் சடலங்களை கிணற்றில் வீசிய இருவர் கைது
மின்வேலியில் சிக்கி பலியான இருவரின் சடலங்களை கிணற்றில் வீசிய இருவர் கைது
மின்வேலியில் சிக்கி பலியான இருவரின் சடலங்களை கிணற்றில் வீசிய இருவர் கைது
ADDED : நவ 07, 2025 03:37 AM

சாத்துார்: சாத்துார் அருகே வேப் பிலைப் பட்டி கெங்கையம்மன் கோயில் அருகில்உள்ள அர்ச்சுனா நதியின் உறைகிணற்றில் நேற்று வெம்பக்கோட்டை தொம்பங்குளம் ரவிக்குமார்47, சுரேஷ்குமார் 45, ஆகி யோரின் சடலங்கள் மீட்கப் பட்டது. மின்வேலியில் சிக்கி பலியான அவர்களது உடலை கிணற்றில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பிலைபட்டியை சேர்ந்தவர் சிங்கம், இவர் மனைவி தெய்வானை, இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இவர்களின் மருமகன்கள் மணிகண்டன்42, சுதாகர்40, மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர்.
காட்டு மிருகங்களிடமிருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காக தோட்டத்தை சுற்றிலும் அரசு அனுமதியின்றி மின்சார வேலி அமைத்துள்ளனர். அக்.31ல் கெங்கையம்மன் கோயிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தொம்பங்குளத்தைச் சேர்ந்த ரவிக் குமார், சுரேஷ்குமார் ஆகியோர் மின்சார வேலயில் சிக்கி பலியாகினர்.
தோட்டத்தில் இறந்து கிடந்த இருவரை பார்த்து பதட்டம் அடைந்த மணிகண்டன், சுதாகர் ஆகியோர் இறந்தவர்களின் உடலை துாக்கி சென்று உறை கிணற்றுக்குள் வீசியது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
முற்றுகை: உயிரிழந்தோரின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் 100க்கு மேற்பட்டவர்கள் நேற்று மதியம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு பேரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குவது, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
டி.எஸ்.பி., யோகேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் அழைத்து சென்றதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

