/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லோடுமேன் கொலை வழக்கில் இருவர் கைது
/
லோடுமேன் கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : ஆக 17, 2025 12:10 AM
சிவகாசி: சிவகாசி அருகே லோடுமேனை கொலை செய்து திருத்தங்கல் கண்மாயில் புதைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் மண்ணில் புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆணின் உடலை நாய்கள் வெளியே இழுத்து போட்ட நிலையில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வந்தனர். உடல் புதைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியதால் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்தவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. உடலில் இருந்த டாட்டு உள்ளிட்ட அடையாளங்களை வைத்து, இறந்தது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த லோடுமேன் சுந்தரமகாலிங்கம் 28, என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் சுந்தர மகாலிங்கத்தை கொலை செய்ததாக முத்துமாரி நகரை சேர்ந்த மதன்குமார் 22, மாரீஸ்வரன் 21 ஆகியவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், மதன்குமார், மாரீஸ்வரன் ஆகியோர் சிவகாசி காமராஜர் பூங்கா அருகே இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர மகாலிங்கம் அடிக்கடி கடைக்கு சென்று தனக்கு மது வாங்கி தருமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து இதேபோன்று தொந்தரவு கொடுத்ததால் மதன் குமார், மாரீஸ்வரன் உள்ளிட்ட சிலர் சுந்தர மகாலிங்கத்தை திருத்தங்கல் செங்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர், என்றனர்.