ADDED : ஜூலை 21, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: பெயின்டர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சத்தியவாணி முத்து நகர் காலனியை சேர்ந்தவர் தினேஷ், 24; பெயின்டரான இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு, காலனி அருகே உள்ள டாஸ்மாக் பார் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர், ஆடு அறுக்கும் கத்தியால் தினேஷை குத்தியதில் உயிரிழந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், தொழில் போட்டி காரணமாக, அதே பகுதியை சேர்ந்த தேவா, 54, டேவிட், 38, அவரை கொலை செய்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.