/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த இரு சத்தீஸ்கர் வாலிபர்கள் கைது
/
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த இரு சத்தீஸ்கர் வாலிபர்கள் கைது
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த இரு சத்தீஸ்கர் வாலிபர்கள் கைது
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த இரு சத்தீஸ்கர் வாலிபர்கள் கைது
ADDED : அக் 02, 2024 03:03 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்:தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரு வாலிபர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன் கடையநல்லூர் - -பாம்பு கோவில் சந்தை ரயில்வே ஸ்டேஷன் இடையே சங்கனாப்பேரியில் ரயில் தண்டவாள ஓரம் பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதை கவனித்த பொதிகை ரயில் இன்ஜின் டிரைவர் வேகத்தை குறைத்ததால் விபத்து இன்றி ரயிலை சங்கரன்கோவில் ஸ்டேஷன் இயக்கினார்.
ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர விசாரணை நடத்தினர். தண்டவாளம் அருகில் உள்ள ஒரு குவாரியில் சத்தீஸ்கர் மாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி தண்டவாளத்தில் நடந்து சென்று அலைபேசியில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டனர்.
அவ்வாறு அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்சிங்பகேல் 21, ஈஸ்வர் மைடியா 23, ஆகியோர் ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் கல் வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். பின அதனை அழித்துள்ளனர்.
அவர்களின் அலைபேசியை ஆய்வு செய்த தனிப்படையினர் அதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.