ADDED : பிப் 01, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் முழுவதும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் சட்டசபை தேர்தல் வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 30, 31 என இரு நாட்கள்தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, வணிகவரித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். மாநில இணைஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை வகித்தார்.
1673 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். மக்களிடம் அடிக்கடி தொடர்புடைய வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மக்கள் சிரமத்தை சந்தித்தனர்.