ADDED : டிச 10, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி 24, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் 23. காரியாபட்டி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வேலை முடித்து இருவரும் டூவீலரில் வீடு திரும்பினர். காரியாபட்டி ஐயப்பன் கோயில் அருகே வந்தபோது, சிவகாசி அருகே செயல்படும் தனியார் கல்லூரி பஸ், மாணவர்களை ஏற்றி செல்ல காலி இடத்தில் திருப்ப முயன்ற போது, டூவீலர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.