/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயம்
/
பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயம்
ADDED : ஜன 07, 2024 01:28 AM

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், வெள்ளூர் கவுண்டன்பட்டியில் பாம்பு மாத்திரை பட்டாசுக்கள் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆலைத் தொழிலாளர்கள் துரைசாமி, 40, சரவணன், 45, ஆகியோர் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மதியம் 1:00 மணிக்கு பாம்பு மாத்திரைகளை 'கட்' செய்யும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்தது.
இதில், இருவரும் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அருகே வெள்ளூர்கவுண்டன்பட்டியில் விபத்தில் சேதமடைந்த பட்டாசு ஆலை அறை.
விருதுநகர் அருகே வெள்ளூர்கவுண்டன்பட்டியில் விபத்தில் சேதமடைந்த பட்டாசு ஆலை அறை.