ADDED : அக் 20, 2026 07:16 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே தவசிலிங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தவசியப்பன் 41.கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். முன்விரோதம் காரணமாக நேற்று மாலை 5: 00 மணியளவில் வீட்டில் இருந்த தவசியப்பனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி 31. விவசாயியான இவருக்கு மனைவி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. அக்கம் பக்கத்தினர் தேடியதில் அறியனேரி கண்மாய் அருகே உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து நிலையில் கிடந்தார். உடலை மீட்ட போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
