ADDED : ஏப் 07, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பி.குமாரலிங்கபுரம் கூலித் தொழிலாளி அமுதவள்ளி 39 . இவர் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலருடன் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றார்.
மீசலுார் விலக்கு அருகே இரவு 8:00 மணிக்கு சென்ற போது அதே பகுதி சரவணக்குமார் (ஹெல்ெமட் அணியவில்லை) டூவீலரை அதிவேகமாக ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது மோதினார். தலையில் பலத்த காயமடைந்த அமுதவள்ளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் சென்ற மாரீஸ்வரி, மீனாட்சி, முத்துமாரி மற்றும் சரவணக்குமார் ஆகியோர் பலத்த காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சரவணக்குமார் உயிரிழந்தார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

