/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி வாலிபர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
/
சிவகாசி வாலிபர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : மார் 20, 2025 06:43 AM
சிவகாசி: சிவகாசியில் பழிக்குபழியாக நடந்த வாலிபர்கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே ஆலாவூரணியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் 27. கூலி தொழிலாளி. கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த சுரேஷை இரு நாட்களுக்கு முன்பு இரவு வீடு புகுந்து 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பியது.
விசாரணையில் திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்த மதனகோபால், தனது அண்ணன் குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக நண்பர்களுடன் சேர்ந்து சுரேசை கொலை செய்தது தெரிய வந்தது. இதில் மதனகோபால் 23, தனசேகரன் 23, சூர்யபிரகாஷ் 19, ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
தப்பியோடிய தருண் 23, முத்துப்பாண்டியை 23, தேடி வந்தநிலையில் இருவரும்திருத்தங்கல் அருகே உள்ள கல்குவாரியில் பதுங்கி இருந்தபோது போலீசார்முத்துப்பாண்டியை பிடித்த நிலையில் தருண் தப்பிப்பதற்காக பாறையில் இருந்து குதிக்கும்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.