/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலர்கள் மோதி 2 பேர் பலி: மேலும் ஒருவர் காயம்
/
டூவீலர்கள் மோதி 2 பேர் பலி: மேலும் ஒருவர் காயம்
ADDED : பிப் 17, 2025 12:55 AM

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் புல்வாய்க்கரை இடையபட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலியாயினர். ஒருவர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நரிக்குடி அ.முக்குளம் கே.நெடுங்குளத்தைச் சேர்ந்த நாகப்பன் 72, மதுரை அண்ணாநகரில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். இவர் பணி முடித்து நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு ஊருக்கு திரும்பினார்.
புல்வாய்க்கரை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது மதுரை விளாங்குடியைச் சேர்ந்த கண்ணன் 32,(ெஹல்மெட் அணியவில்லை) ஓட்டிய டூவீலரில் லிப்ட் கேட்டு நாகப்பன் ஏறி சென்றார்.
புல்வாய்க்கரை இடையபட்டி அருகே சென்ற போது எதிரே காரியாபட்டி வையம்பட்டியைச் சேர்ந்த காளி 35, (ெஹல்மெட் அணியவில்லை) ஓட்டிய டூவீலர், கண்ணன் ஓட்டிய டூவீலரில் நேருக்கு நேர் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளி இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகப்பன் நேற்று காலை இறந்தார். கண்ணன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.