/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரி மோதி டூவீலரில் வந்த இருவர் பலி --உடலை வாங்க மறுத்து போராட்டம்
/
லாரி மோதி டூவீலரில் வந்த இருவர் பலி --உடலை வாங்க மறுத்து போராட்டம்
லாரி மோதி டூவீலரில் வந்த இருவர் பலி --உடலை வாங்க மறுத்து போராட்டம்
லாரி மோதி டூவீலரில் வந்த இருவர் பலி --உடலை வாங்க மறுத்து போராட்டம்
ADDED : அக் 21, 2024 12:45 AM

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே டிப்பர் லாரி மோதியதில் டூவீலரில் வந்த ரவிக்குமார் 25, ரஞ்சித் குமார் 23, சம்பவ இடத்திலேயே பலியாயினர். இழப்பீடு வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சத்திரப்பட்டி நத்தம்பட்டி சாலையில் அம்மன் கோவில்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், மண் அள்ளும் வாகன டிரைவர். திருமணம் ஆகி 20 நாள் ஆகிறது. இவரது நண்பர் ரஞ்சித் குமார்; கூலித்தொழிலாளி.
இருவரும் ராஜபாளையம் சென்று விட்டு மாலை 5:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நத்தம்பட்டி ரோடு வழியே வந்து கொண்டிருந்தனர். அம்மன் கோவில்பட்டி அருகே வந்தபோது நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் இருவரும் உடல் நசுங்கி பலியாயினர்.
இதையடுத்து உறவினர்கள், கிராமத்தினர் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து பணிகள் நடந்து வரும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்திற்கு கீழ் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.