/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாரனேரி வாலிபர் வெட்டிக்கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை
/
மாரனேரி வாலிபர் வெட்டிக்கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை
மாரனேரி வாலிபர் வெட்டிக்கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை
மாரனேரி வாலிபர் வெட்டிக்கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 06, 2025 12:16 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வாங்கிய கடனை திரும்ப கேட்ட தகராறில் அழகு அம்பேத் வீரனை 27, வெட்டி கொலை செய்த வழக்கில் ராமர் 43, கண்ணன் 62, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி அருகே மாரனேரி ராஜேஸ்வரி பயர் ஒர்க்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அழகு அம்பேத் வீரன். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கெவின் 25, ராமர், நாரணபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர்கள் ராஜேஸ்வரி பயர் ஒர்க்ஸ் தொழிலாளர்கள்.
அழகு அம்பேத் வீரனிடம் கெவின் ரூ.3500 கடன் வாங்கியுள்ளார். அதனை திரும்ப கேட்டதில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.
2010 ஏப்.,10 இரவு அழகு அம்பேத் வீரன் தன் வீட்டில் இருக்கும்போது கெவின், ராமர், கண்ணன் ஆகியோர் வீடு புகுந்து தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
மாரனேரி போலீசார் விசாரித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் ராமர், கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் ஆஜரானார்.
வழக்கு விசாரணை காலத்தில் கெவின் தலைமறைவானதால் அவருக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுவரை அவர் பிடிபடவில்லை.

