/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது
/
மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது
மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது
மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது
ADDED : ஆக 28, 2025 11:50 PM
காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் இயங்கி வரும் டாஸ்மாக்கிற்கு நேற்று முன்தினம் 10:30க்கு வந்த 4பேர் மது பாட்டில்கள் கேட்டனர்.
கடை மூடப்பட்டதால் கொடுக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுரை மாவட்டம் கொக்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டியிடம் இருந்த மது பாட்டில்களை பறித்து ஓடினர். இதை தட்டி கேட்ட பார் ஊழியர்களுக்கும், த.வெ.க., நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.
த.வெ.க., மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவணகுமார், நகர பொறுப்பாளர்கள் மாலிக், முத்துக்குமார், மதுரை பாரப்பத்தியைச் சேர்ந்த சரவணன்குமார் மீது காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரவணகுமார், முத்துக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.