/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு இரு கிராம மக்கள் முற்றுகை
/
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு இரு கிராம மக்கள் முற்றுகை
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு இரு கிராம மக்கள் முற்றுகை
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு இரு கிராம மக்கள் முற்றுகை
ADDED : டிச 18, 2025 05:50 AM
நரிக்குடி: ஏழு ஆண்டுகளாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் கிடப்பில் போடப் பட்டதை கண்டித்து, மிதலைக்குளம், புளியங்குளம் மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நரிக்குடி மிதலைக்குளம், புளியங்குளத்தில் 1500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக் கின்றனர்.
பார்த்திபனூர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் அக்கிராமங்கள் உள்ளன. இதனிடையே மானாமதுரை அருப்புக்கோட்டை ரயில் ரோடு உள்ளது.
மற்ற ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது போல், அந்த ரோட்டிலும் சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி நடந்தது. முறையான திட்டமிடல் இல்லாமல் பட்டா நிலத்தில் சுரங்கப்பாதை பணி செய்ய முயன்றதால், அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து, தடுப்பு ஏற்படுத்தினர். 7 ஆண்டுகளாகியும் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
கனரக வாகனங்கள் செல்ல வழியில்லாமல் 7 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயில்வே ரோட்டை கடந்து செல்லப்படாத பாடுபடுகின்றனர்.
அது மட்டுமல்ல 10க்கு மேற்பட்ட கிராமத்தினர் அந்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்து இரு கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ரயில் ரோட்டில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி, நரிக்குடி இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, திருச்சுழி இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

