ADDED : ஜன 15, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : திருத்தங்கல்லை சேர்ந்தவர் முத்து விஜயன் மகன் ஸ்ரீ சுந்தரன் 21, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் -- விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்ற போது ரோட்டை கடக்க முயன்ற குறிஞ்சி நகர் முனீஸ்வரி 52, மீது மோதினார்.
இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.