/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தினமும் நடக்கும் டூவீலர் திருட்டுகள் அதிகரிப்பு; வீட்டு வாசலில் நிறுத்துவதற்கு அச்சம்
/
தினமும் நடக்கும் டூவீலர் திருட்டுகள் அதிகரிப்பு; வீட்டு வாசலில் நிறுத்துவதற்கு அச்சம்
தினமும் நடக்கும் டூவீலர் திருட்டுகள் அதிகரிப்பு; வீட்டு வாசலில் நிறுத்துவதற்கு அச்சம்
தினமும் நடக்கும் டூவீலர் திருட்டுகள் அதிகரிப்பு; வீட்டு வாசலில் நிறுத்துவதற்கு அச்சம்
ADDED : டிச 15, 2024 06:15 AM
அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாப்பட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் நடக்கும் டூவீலர் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு, கடை, நிறுவனங்கள்வாசலில் இரவில் நிறத்தப்படும்டூவீலர்கள் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது காணாமல் போகிறது.
இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூர் திருடர்களுடன் கைகோர்த்து வெளி மாவட்ட திருட்டு கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். திருடு போன டூவீலர்களின் உரிமையாளர்களிடம் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என போலீசார் கேட்கும் போது உள்ளூரில் வசிக்கும் சிலரின் பெயர்களை சொல்கின்றனர்.
இந்த சந்தேகத்திற்கு உரிய நபர்களை போலீசார் பிடித்து தங்கள் பாணியில் விசாரிக்கும் போது தான் திருட்டு கும்பல் பற்றி விவரம் தெரிகிறது. இப்படி திருடப்படும் டூவீலர்கள் மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுவதால் ஒரு முறை வெளி மாவட்டத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு விட்டால் மீண்டும் கண்டறிவது முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
ராமநாதபுரத்திற்கு கொண்டுச் செல்லப்படும் திருட்டு வாகனங்களின் என்ஜின்கள் கொண்டுபடகு என்ஜின்களாக பயன்படுத்தப்படுகின்றன. இச்சம்பவங்களில் உள்ளூர் திருடர்களை போலீசார் கைது செய்தாலும் அவர்கள் மூலம் வெளியூர் திருடர்களை கைது செய்ய முடிவதில்லை.இதனால் வீட்டில் பார்க்கிங் வசதிகள் இல்லாதவர்கள் இரவில் வெளிப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவற்கு அஞ்சுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தினமும் நடப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
திருட்டு டூவீலர்களுக்கான விற்பனை சந்தை விரிவடைந்து வருவதால் போலீசார் திருட்டு கும்பலை கைது செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் டூவீலர் திருட்டு சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுத்து திருட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.