தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டூவீலர் திருடியவர்கள் கைது

டூவீலர் திருடியவர்கள் கைது

டூவீலர் திருடியவர்கள் கைது


ADDED : ஜூன் 30, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார்மற்றும் சுற்று கிராமங்களில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடு போயின போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரனையில் துாத்துக்குடி மாவட்டம் வேப்பலோனட பட்டியை சேர்ந்த தங்க மாரியப்பன் ,26.தயால் பாரதி, 20. கௌசிக்குமார், 77.ஆகியோர் திருடியது தெரிய வந்தது போலீசார் அவர்களை கைது செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

* சாத்துார்: சாத்துார் இருக்கன்குடியை சேர்ந்தவர் வீர சுப்பிரமணியராஜா, 25. இவருக்கு டூவீலரை நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு வீட்டில் துாங்கினார்.காலையில் பார்த்தபோது டூவீலர் திருடு போயிருந்தது. இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு பறிமுதல்: இருவர் கைது

சாத்துார்: சாத்துார் வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி, 27. வெற்றிலையூரணியை சேர்ந்தவர் பாண்டி, 33. இருவரும் வீட்டில் வைத்து அரசு அனுமதியின்றி சோல்சா, உருட்டு வெடி தயாரித்தனர். ரோந்து சென்ற போலீசார் பட்டாசு களை பறிமுதல் செய்து இருவரை யும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுபாட்டில் பறிமுதல் ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் வெற்றிலையூரணியை சேர்ந்தவர் பாண்டி, 33. வீட்டில் வைத்து 180 மி.லி.,அளவு கொண்ட 28 மது பாட்டில்களை விற்றார்.ரோந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் மாயம்

சாத்துார்: சாத்துார் சல்வார் பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் மகள் காளீஸ்வரி 22.நேற்று முன் தினம் வீட்டிலிருந்தவர் மாலையில் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us