/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டோரங்களில் டூவீலர்கள்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டோரங்களில் டூவீலர்கள்
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டோரங்களில் டூவீலர்கள்
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டோரங்களில் டூவீலர்கள்
ADDED : ஏப் 17, 2025 05:32 AM

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் பஸ்கள் வெளியேறி செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கின்றது.
சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகில் உள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக ஏராளமானோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.
தவிர பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே செல்லும் ரோடு நகருக்குள்ளும் செல்வதால்அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே பஸ்கள் வெளியேறும் இடத்தில் வரிசையாக ரோட்டிலேயே டூவீலர்கள்நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறும் பஸ்கள் பெரிதும் சிரமப்படுகின்றன.
இதே இடத்தில் நான்கு ரோடு பிரிவதால் இயல்பாகவே போக்குவரத்து நெருக்கடி இருக்கும். இதில் டூவீலர்களையும் ரோட்டிலேயே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. சில சமயங்களில் விபத்தும் ஏற்பட நேரிடுகின்றது. எதிரே வாகனங்கள்வரும்போது விலகிச் செல்வதில் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது.
எனவே பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே டூவீலர்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.