/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் ஸ்டேஷனில் குவிந்து கிடக்கும் டூவீலர்கள்; எலும்பு கூடான வாகனங்கள்
/
போலீஸ் ஸ்டேஷனில் குவிந்து கிடக்கும் டூவீலர்கள்; எலும்பு கூடான வாகனங்கள்
போலீஸ் ஸ்டேஷனில் குவிந்து கிடக்கும் டூவீலர்கள்; எலும்பு கூடான வாகனங்கள்
போலீஸ் ஸ்டேஷனில் குவிந்து கிடக்கும் டூவீலர்கள்; எலும்பு கூடான வாகனங்கள்
ADDED : மே 11, 2025 11:29 PM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் பல ஆண்டுகளாக துருப்பிடித்து எலும்பு கூடான நிலையில் உள்ளது.
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகளில் டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புழுதி படிந்து துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் செடி கொடிகள் முளைத்து விஷ பூச்சிகளின் கூடாரமாகவும் உள்ளது.
வழக்கு தொடர்பான வாகனங்கள் என்றாலும் முறையாக விரைவில் வழக்கை முடித்து சம்பந்தப்பட்டவர்களிடம் வாகனத்தை ஒப்படை ஒப்பதில் போலீஸ் மெத்தனம் காட்டுகிறது. இதேபோன்று யாரும் உரிமை கூறாத வாகனங்களும் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு வாகனமும் 40 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்கும். இவற்றை பராமரிப்பு இன்றி விட்டு விடுவதால் மழை, வெயிலில் நனைந்து வாகனங்கள் துருப்பிடித்து போகின்றன.
பல ஆண்டுகளாக கிடைக்கும் இந்த வாகனங்களை யாரும் உரிமை கோராத வாகனங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசிடம் அனுமதி பெற்று ஏலம் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஸ்டேஷனை வாகனங்கள் அடைத்து நிற்பதுடன் யாருக்கும் பயன் படாமல் துருப்பிடித்து வீணாகி விடும்.