/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி
/
இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 26, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:சிவகாசி அருகே தேவர்குளத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் 46. இவர் தன்னை அடிக்கடி தாக்கும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று காலை எஸ்.பி., அலுவலகம் வளாகம் அருகே பழைய மாவட்டகல்வி அலுவலகம் முன்பு வந்தவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
இதே போல சிவகாசியைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பாக நடவடிக்கைக்கோரி வந்தார். இவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். இருவரையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.