/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழிலாளிக்கு வெட்டு: இரு வாலிபர்கள் கைது
/
தொழிலாளிக்கு வெட்டு: இரு வாலிபர்கள் கைது
ADDED : ஆக 17, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் கஸ்துாரிபாய்நகரைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கணேசன் 26.
இவர் நேற்று மதியம் 2:45 மணிக்கு ஓடைப்பட்டியிலுள்ள வெல்டிங் கடையில் இருந்தார். அங்கு டூவீலரில் சென்ற ஓடைப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி 26, கிருஷ்ணபாண்டி 21, ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டு கத்தியால் கணேசனை வெட்டினர். இதில் காயமடைந்த கணேசன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருதுபாண்டி, கிருஷ்ணபாண்டியை போலீசார் கைது செய்தனர்.