/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதாள சாக்கடை பணிகள் அருப்புக்கோட்டையில் தீவிரம்
/
பாதாள சாக்கடை பணிகள் அருப்புக்கோட்டையில் தீவிரம்
ADDED : அக் 09, 2024 04:28 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முதற்கட்டமாக புறநகர் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு அரசு 297.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக புறநகர் பகுதிகளான கணேஷ் நகர், அன்பு நகர், நெசவாளர் காலனியில் உள்ள தெருக்களில் மேன்ஹோல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தவிர நகரின் ஒரு சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றும் சம்ப் தொட்டிகள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
இதுகுறித்து, சுந்தரலட்சுமி, நகராட்சி தலைவர்: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. முதற் கட்டமாக மேன்ஹோல் அமைக்கும் பணி நடக்கிறது. தரமான முறையில் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இடைவிடாது பணிகள் செய்யப்பட்டு வருவதால் ஒரு சில ஆண்டுகளில் முடிவடைந்து விடும்.