/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துார்வாரப்படாத வரத்து ஓடைகள், அடர்ந்த சீமை கருவேல மரங்கள்
/
துார்வாரப்படாத வரத்து ஓடைகள், அடர்ந்த சீமை கருவேல மரங்கள்
துார்வாரப்படாத வரத்து ஓடைகள், அடர்ந்த சீமை கருவேல மரங்கள்
துார்வாரப்படாத வரத்து ஓடைகள், அடர்ந்த சீமை கருவேல மரங்கள்
UPDATED : ஜூலை 31, 2025 06:37 AM
ADDED : ஜூலை 31, 2025 02:59 AM
அருப்புக்கோட்டை : துார்வாராத வரத்து ஓடைகள், அடர்ந்த சீமைகருவேல மரங்கள், மண்மேவிய வரத்து ஓடைகள் போன்ற பிரச்சனைகளால் காசிலிங்காபுரம் கண்மாய் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சேதுராஜபுரம் ஊராட்சியில் உள்ளது காசிலிங்காபுரம் கண்மாய். ஒரு காலத்தில் விவசாயத்திற்கும், குடி நீருக்கும், குளிக்கவும் கண்மாயை மக்கள் பயன்படுத்தி வந்தனர். கண்மாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழைக்காலத்தில் வெள்ளம் கண்மாயில் வந்து சேரும். சுத்தமான மழை நீர் கண்மாயில் சேர்வதால் கண்மாய் தண்ணீரை மக்கள் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் கண்மாய் தூர்வாரப்படாமல் விட்டதால், மழைநீர் வருவது குறைந்து போனது. கண்மாய்க்கு மழை நீர் வரும் ஓடைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து உள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்துள்ளது. இதனால் காட்டுப் பன்றிகள் வாழ்வாதாரமாக ஆகிவிட்டது. இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை பாழாக்குகின்றன.
கண்மாய் கரை முழுவதும் தூர்ந்து போய்விட்டது. கண்மாயில் மண் மேவி விட்டது. கண்மாயை பராமரிப்பு செய்யா விடில் இனி வரும் காலம் மழைநீர் வருவது முற்றிலும் நின்று போய்விடும். குடிநீர் பிரச்சனை ஏற்படும். கண்மாயை தூர்வாரி பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெட்டி அகற்றவும் சின்னமுத்து, விவசாயி: கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. கண்மாய் முழுவதும் பரவி கிடப்பதால் இருக்கின்ற தண்ணீரையும் உறிஞ்சி விடுகிறது.
சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினால்தான் கண்மாயில் தண்ணீர் சேரும். மழைக்காலத்திற்குள் ஊராட்சி நிர்வாகம் மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பலமிழந்த கரைகள் சின்ராஜ், விவசாயி: காசிலிங்காபுரம் கண்மாய் பராமரிப்பு பணி செய்யாமல் விட்டதால் கரைகள் பலமிழந்து உயரம் குறைந்துவிட்டது. கண்மாய் முழுவதும் மண் மேவி கிடக்கிறது.
கண்மாயை ஆழப் படுத்த வேண்டும். சுற்றியுள்ள கரைகளை உயர்த்தி பலப்படுத்த வேண்டும். கண்மாயை பராமரிப்பு செய்யாவிடில் சில ஆண்டுகளில் கண்மாய் இருப்பதே தெரியாமல் போய்விடும்.
சேதமடைந்த ஓடைகள் முருகன், விவசாயி: காசிலிங்காபுரம் கண்மாய்க்கு மழைநீர் வரும் ஓடைகள் அனைத்தும் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து விட்டது.
இதனால் கண்மாய்க்கு வரும் மழைநீர் அளவு குறைந்து போய்விட்டது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. ஓடைகள் அனைத்தையும் தூர்வாரி கண்மாயில் மழை நீர் சேகரம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.