/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடிவடையாத நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு; விபத்து அபாயத்தில் நத்தம்பட்டி மக்கள்

ADDED : மே 11, 2025 11:29 PM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம் பட்டியில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி முடிவடையாமல் அப்பகுதி மக்கள் விபத்து அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயை நெருங்கியுள்ளது. இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் மட்டுமே அமைக்கப்பட வேண்டியதுள்ளது. இதில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து அழகாபுரி வரை லட்சுமியாபுரம், நத்தம் பட்டியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நத்தம்பட்டி மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால், ரோட்டை கடப்பதில் நத்தம்பட்டி, வடுகப்பட்டி, அம்மாபட்டி, மூவரை வென்றான், சொக்கலாம்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் மேம்பாலத்தில் நிற்கும் பஸ்களில் இறங்கி ரோட்டை கடக்கின்றனர். இதில் முதியவர்கள், விவசாய தொழிலாளர்கள் டூவீலர்களில் ரோட்டை கடக்கும் போது விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
நேற்று காலை கூட நான்கு வழிச்சாலையில் ரோட்டில் டூவீலரில் சென்ற நத்தம் பட்டியை சேர்ந்த ராமர் 63, என்பவர் கார் மோதி பலியானார். எனவே நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுவட்டார மக்கள் எதிர்பார்க்கின்றனர்.