/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தவணை தொகை செலுத்தாத லோடுவேன் பறிமுதல்
/
தவணை தொகை செலுத்தாத லோடுவேன் பறிமுதல்
ADDED : மார் 11, 2026 04:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: மார்ச் 11--: தவணைத் தொகை செலுத்தாததால் லோடு வேனை எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற ராஜபாளையம் தனியார் பைனான்ஸ் கிளை மேலாளர், ஊழியர்கள் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி 50, இவர் பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராஜபாளையம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 2022ல் 48 மாத தவணையில் ஒரு லோடுவேன் வாங்கி அதற்கு மாதத்தவணை தொகை செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாத தவணைத் தொகையை செலுத்தாத நிலையில், மார்ச் 5ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்திற்கு எதிரே புத்துக்கோயில் பின்புறம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீனி கிழங்குடன் நிறுத்தி இருந்த லோடுவேனை, தனியார் பைனான்ஸ் கிளை மேலாளர், ஊழியர்கள் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ள னர்.
இது குறித்து முத்துலட்சுமி புகாரில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார், கிளை மேலாளர், வாகனத்தை எடுத்து சென்ற ஊழியர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

