/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப்பனிடப்படாத ரோடு, சுகாதார வளாகம் இல்லை --அவதியின் பிடியில் அன்னம ராஜா நகர் மக்கள்
/
செப்பனிடப்படாத ரோடு, சுகாதார வளாகம் இல்லை --அவதியின் பிடியில் அன்னம ராஜா நகர் மக்கள்
செப்பனிடப்படாத ரோடு, சுகாதார வளாகம் இல்லை --அவதியின் பிடியில் அன்னம ராஜா நகர் மக்கள்
செப்பனிடப்படாத ரோடு, சுகாதார வளாகம் இல்லை --அவதியின் பிடியில் அன்னம ராஜா நகர் மக்கள்
ADDED : டிச 26, 2024 04:30 AM
ராஜபாளையம்: குழாய்க்காக தோண்டப்பட்டு செப்பானிடாத ரோடு, நாய்கள் தொல்லை, ஓடை துார் வாராதது என தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சி அன்னமராஜா நகர் மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
முனியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நடுத்தெரு என மெயின் தெருக்களுடன் 15 ற்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்கள் சந்துகளுடன் அமைந்துள்ளது. புதிய குடியிருப்புகளுக்கு போதிய மின்விளக்கு, தெரு கழிவுநீர் வெளியேற்ற வசதி இல்லை.
தினசரி குப்பைகள் அகற்றும் பணி நடைபெறாததால் குப்பையை குவித்து எரித்து விடுகின்றனர். குடிநீருக்காக தோண்டப்பட்ட ரோடு சரி செய்யாமல் வைத்துள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.
சமுதாய கூடம் இல்லாமல் நிகழ்ச்சிகளின் போது சிரமப்படுகின்றனர். தாமிரபரணி குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுவதுடன் அடிக்கடி குழாய் உடைப்பினால் சப்ளை தாமதம் ஆகிறது.
மகளிர் சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் ஓடையையும் புதர் பகுதியை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பற்ற தெரு நாய்கள் அதிகரித்து குழந்தைகளை விரட்டுகின்றன.
எரிக்கப்படும் குப்பை
சரோஜா, குடியிருப்பாளர்: ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஊராட்சி சார்பில் குப்பை பல்வேறு இடங்களில் குவித்து வைத்து தீ வைத்து எரிக்கின்றனர். குடியிருப்பு பின்புறமும் குப்பை குவிந்து வருவதை முறையாக அகற்றுவது இல்லை.
இவற்றை எரிப்பதால் அருகாமை வசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு சிக்கல் ஏற்படுகிறது.
கழிவு நீருக்கு வழி இல்லை
முனீஸ்வரி, குடியிருப்பாளர்: குறிப்பிட்ட சில தெருக்களைத் தவிர மற்ற பகுதிகளில் வெளியேறும் கழிவு நீர் அருகாமை காலி இடங்களில் தேக்கப்படுகிறது. இதனால் சுகாதார கேட்டுடன் கொசு தொல்லை அதிகமாகிறது.
ரோடு சேதம்
முத்து காமாட்சி, குடியிருப்பாளர்: முனியாண்டி கோயில் மெயின் ரோட்டில் தாமிரபரணி குடிநீருக்காக தோண்டப்பட்ட ரோடு மாதக்கணக்கில் செப்பனிடாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகின்றது. வாறுகால் அடைப்பதால் கழிவு நீர் தெருவில் ஓடுகிறது. சரி செய்ய வேண்டும்.
ஓடை பராமரிப்பு அவசியம்
ராசாத்தி, குடியிருப்பாளர்: ரயில்வே பகுதியிலிருந்து தெருக்களின் வழியாக ஓடை செல்கிறது. ஓடை தடுப்புச் சுவர் சிதிலமடைந்து விட்டது. பராமரிப்பு இல்லாததால் முட்புதர்களும் வளர்ந்து சுகாதாரக் கேடாக உள்ளது. ஓடையை துார்வாரி கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.

