/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கம்பிக்குடியில் பள்ளி முன் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியதால் சுகாதாரக்கேடு

ADDED : நவ 22, 2024 03:43 AM

காரியாபட்டி: காரியாபட்டி கம்பிக்குடியில் ரோட்டோரத்தில் குப்பைகள், பள்ளி முன் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டி கம்பிக்குடியில் குப்பைகளை கொட்ட ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் தொட்டிகள்சேதமடைந்தன. ஒரே ஒரு குப்பைத்தொட்டி மட்டும் பயன்பாட்டில் உள்ளது.
இதையடுத்து நடுநிலைப்பள்ளி எதிரில் ரோட்டோரத்தில் குப்பையை கொட்டுகின்றனர். மேலும் 4வது வார்டில் சுகாதார வளாகம் கிடையாது. ரோட்டோரத்தை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் எதிரில் பள்ளி உள்ளது. துர்நாற்றத்தால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சுகாதாரக்கேடால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது.
மேலும் இங்குள்ள சிவன் கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். ரோட்டோரத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் வாகனங்களை பதம் பார்க்கிறது. இரு வாகனங்கள் விலகிச் செல்ல வழி இல்லை. திறந்தவெளி கழிப்பிடத்தால் பக்தர்கள்முகம் சுளித்து செல்கின்றனர்.
அப்பகுதியில் சுகாதாரவளாகம் ஏற்படுத்தி, ரோட்டோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.