/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு
/
பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு
பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு
பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு
ADDED : ஜன 17, 2025 05:00 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் பல்வேறு பகுதியில் கட்டப்பட்டுஉள்ள சுகாதார வளாகங்கள்பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். திறந்தவெளி கழிப்பறையால் தொற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் சுகாதார வளாகம், பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில மாதங்கள்மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லை.
இதேபோல் முனியசாமி நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதேபோல் நகரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லாமல் வீணாக காட்சியளிக்கிறது.
இவைகளில் பெரும்பான்மையானவை முட்புதர்களால் சூழப்பட்டு சேதம் அடைந்து வருகின்றது. சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லாததால் நகர் முழுவதுமே திறந்த வெளி கழிப்பறையாக மாறி வருகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு மக்கள் தொற்று நோய் பாதிப்பிற்கும் ஆளாகி வருகின்றனர்.
எனவே பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்களில் மராமத்து பணிகள்மேற்கொள்ளப்பட்டு தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.