ADDED : செப் 20, 2025 03:33 AM
விருதுநகர்,: விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அமைச்சர்கள் ஆணை வழங்கினர்.
கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன், மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முஸ்லீம் நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக உயர்நிலை வகுப்புகளுக்கு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தனர். மேலும் ரூ.1.13 கோடிக்கு கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளை திறந்து வைத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செல்வி சுகந்தி, விருதுநகர் நகராட்சி தலைவர் ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.