/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவத் துறையில் பணியிடங்கள் அறிவிப்பு
/
மருத்துவத் துறையில் பணியிடங்கள் அறிவிப்பு
ADDED : ஜூலை 24, 2025 11:31 PM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட செம்பட்டி, இலுப்பையூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர்கள் 2, ஆய்வக நுட்புநர் 8, செவிலியர் 60, பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது.
இதற்கான தகுதிகள், விண்ணப்ப படிவம் குறித்த விவரங்கள் https://virudhunagar.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ ஜூலை 23 முதல் ஆக. 7 மாலை 5:45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.