/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு
/
கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு
ADDED : ஜூன் 10, 2025 12:55 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நேற்று வைகாசி விசாகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகன் அவதாரம் செய்த வைகாசி மாத விசாகம் நட்சத்திரமான நேற்றைய தினத்தை பக்தர்கள் அவதார நாளாக கொண்டாடினர்.
விருதுநகரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வாலசுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில், அம்பலபுளி பஜார் சுப்பிரமணிய சுவாமி கோயில், சஞ்சீவி மலை முருகன் கோயில், சொக்கர் கோயில், தளவாய்புரம் முருகன் கோவில், தேவதானம் நாகமலை முருகன் கோயில், சத்திரப்பட்டி சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன.