/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வள்ளுவர் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
வள்ளுவர் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 31, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 20வது ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் சிவகுமாரன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சந்தானம் முன்னிலை வகித்தார். மாணவி ஸ்ரீ லயா வரவேற்றார். முதல்வர் டேவிட் மனோகரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி திரேகா நன்றி கூறினார்.