/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் ஸ்டேஷனில் பாழாகும் வாகனங்கள்
/
போலீஸ் ஸ்டேஷனில் பாழாகும் வாகனங்கள்
ADDED : மார் 18, 2024 12:02 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் தகுந்த பாதுகாப்பின்றி பாழாகி வருவதற்கு தீர்வு காண மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் டவுண், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் டூவீலர்கள், கனரக, விபத்து, குற்ற செயல்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு முடியும்வரை போலீசார் கட்டுப்பாட்டில் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் முறையான பாதுகாப்பு இன்றி மழை வெயிலால் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று வருகிறது.
ஒவ்வொரு வழக்கிலும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் இட நெருக்கடி, போலீசாரின் அக்கறை இன்மை போன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன் வளாகம் நிறைந்து அருகில் உள்ள ரோட்டோரங்களையும் அடைத்து நிற்கிறது.
இது போன்ற பறிமுதல் செய்யப்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் மனநிலை வேதனைக்கு உள்ளாவதுடன், வாகனங்கள் பாழாவதால் யாருக்கும் பயனின்றி போகிறது.
வழக்கு முடிந்து வாகனங்களை மீட்கும் போது புதிதாக இருந்த வாகனங்களும் காயலான் கடைக்கு செல்லும் நிலை ஏற்படுவதை முறையான பாதுகாப்புடன் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

