/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலத்தை அளக்க லஞ்சம் தலையாரி, வி.ஏ.ஓ., சிக்கினர்
/
நிலத்தை அளக்க லஞ்சம் தலையாரி, வி.ஏ.ஓ., சிக்கினர்
ADDED : ஏப் 23, 2025 02:40 AM

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம், வதுவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி, தன் நிலத்தை அளந்து சான்றிதழ் பெறுவதற்கு, வதுவார்பட்டி வி.ஏ.ஓ., இப்ராஹிம் என்பவரை அணுகியுள்ளார். வி.ஏ.ஓ.,வும், செட்டிக்குறிச்சியை சேர்ந்த தலையாரி சிங்காரமும், நிலத்தை அளக்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
சின்னத்தம்பி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார், சின்னத்தம்பியிடம் ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை கொடுத்து அனுப்பினர்.நேற்று காலை, 11:00 மணிக்கு, வதுவார்பட்டி அலுவலகத்தில் பணத்தைப் பெற்ற இப்ராஹிம், உடன் இருந்த சிங்காரம் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

