/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பு பேரூராட்சி 6வது வார்டு விசிட்
/
வத்திராயிருப்பு பேரூராட்சி 6வது வார்டு விசிட்
ADDED : ஜன 29, 2025 05:42 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பேரூராட்சி 6வது வார்டில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வராமல் கார், வேன் ஸ்டான்டாக மாறிய நிலை, அங்குள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்படுத்தப்பட முடியாத நிலை உட்பட பல்வேறு சிரமங்களுடன் மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலப்பாளையம் வடக்கு தெரு, காளியம்மன் கோயில் தெரு பகுதிகளை கொண்ட இந்த வார்டில் பஸ் ஸ்டாண்ட், பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ்கள் முழு அளவில் வந்து செல்லாததால் கார், வேன் ஸ்டாண்டாக மாறியுள்ளது.
அங்குள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து மக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளது.பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.
வெள்ளை விநாயகர் கோயிலில் இருந்து மேலப்பாளையம் தெருவில் சுகாதார வளாகம், குளியல் தொட்டியை சுற்றி சுகாதாரக்கேடு காணப்படுகிறது.
பஸ்கள் வந்து செல்ல வேண்டும்
-மாணிக்கம், குடியிருப்பாளர்: வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, தாலுகா ஆபீஸ், நீதிமன்றம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நீதிமன்றம் உள்ள நிலையில் பெரும்பாலான பஸ்கள் முத்தாலம்மன் பஜாரில் நின்று விடுகிறது குறிப்பாக கோட்டையூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வருவதில்லை.
எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசமான சுகாதார வளாகங்கள்
மணிமாறன், குடியிருப்பாளர்: தனித்தாலுவாக உருவாக்கப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.
இதேபோல் வார்டில் உள்ள சுகாதார வளாகங்களில் உள்ள குறைகளை சீர் செய்து மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது
-தவமணி, பேரூராட்சித் தலைவர்: பஸ் ஸ்டாண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளை விநாயகர் கோயிலில் இருந்து ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் பேவர்ப்ளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவிக்கும் குறைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும்.