நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி விலக்கில் மது விலக்கு அமலாக்க பிரிவு சார்பில் கடத்தல் மது பாட்டில்கள் குறித்து வாகன சோதனை நடந்தது.
வெளி மாநிலங்களில் இருந்து சிவகாசி வரும் கனரக வாகனங்கள், பஸ்கள், ஆம்னி பஸ்களில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவது குறித்து சோதனை செய்யப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., சண்முக சங்கரன், ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தி, கருப்பசாமி எஸ்.ஐ., சோதனை மேற்கொண்டனர்.