/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்டேஷன்களில் பாழாகும் வாகனங்கள்
/
ஸ்டேஷன்களில் பாழாகும் வாகனங்கள்
ADDED : ஜன 18, 2025 07:20 AM

காரியாபட்டி : திருட்டு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கனரக வாகனங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பாழாகி வருகிறது. அதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி, மல்லாங்கிணர், அ. முக்குளம், நரிக்குடி, ஆவியூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் திருட்டு, விபத்து உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கனரக வாகனங்கள் கிடப்பில் உள்ளன.
பல ஆண்டுகளகியும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை மீட்க முடியாமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.
திறந்தவெளியில் போடப்பட்டுள்ளதால் மழை வெயிலுக்கு துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவிற்கு பாழாகி வருகிறது.
கேட்பாரற்று கிடப்பதால் முக்கியமான பொருட்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். வீணாக இடத்தை அடைத்து கிடப்பதுடன், விஷப்பூச்சிகள் தங்கி வருவதால், பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
ஸ்டேஷனை சுற்றி பழைய வாகனங்கள் குப்பைகளாக கிடப்பதால் பார்க்க அசுத்தமாக உள்ளது.
இவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வருவாய் கிடைப்பதுடன், தேவை இன்றி இடத்தை அடைப்பதை தவிர்க்க முடியும்.
பயன்படும் பொருட்களை பிரித்தெடுத்து மற்ற வாகனங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் நீண்ட நாட்களாக இடத்தை காத்துக் கிடக்கும் பழைய வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.