/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பைக்கு வைத்த தீயில் வாகனங்கள் எரிந்தன
/
குப்பைக்கு வைத்த தீயில் வாகனங்கள் எரிந்தன
ADDED : ஆக 01, 2025 09:49 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில்வே பீடர் ரோடு அருகே காமராஜர் ரோட்டில் குப்பைக்கு வைத்த தீ பழைய இரும்பு கடையில் பரவி அருகில் நின்றிருந்த வேன்கள், தண்ணீர் டிராக்டர் எரிந்து நாசமானது.
சிவகாசி காமராஜர் ரோட்டில் காலியிடத்தில் இருந்த குப்பைக்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு தீ வைத்துள்ளனர். காற்று வீசிய நிலையில் அருகில் இருந்த பழைய இரும்புக்கடைக்கு தீ பரவியது. இக்கடையில் வெளியில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட கழிவுகளில் தீப்பிடித்தது. தொடர்ந்து அருகில் நின்றிருந்த பயணிகள் வேன், லோடுவேன், தண்ணீர் டிராக்டரில் தீ பற்றி எரிந்து அவை சேதமானது. அருகில் இருந்த மரமும் எரிந்தது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். தீவிபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக புகை மண்டலமாக காட்சியளித்தது. டவுன் போலீசார் விசாரித்தனர்.