/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : செப் 23, 2024 06:22 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் ரோடு ஒட்டிய கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு உள்ளது. இதனை ஒட்டி 20 அடி அகலம் 10 அடி ஆழம் கொண்ட மழை நீர் கால்வாய் புதுபஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள புதியாதி குளம் கண்மாயில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது.
சங்கரன்கோவில் முக்கில் தொடங்கி சிங்கத் திருளப்ப சுவாமி கோயில் வரை பெரும் பகுதி இடங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் ரோட்டில் இருந்து ஒதுங்கும்போது கால்வாயில் விழுந்து காயம் அடைவது தொடர்கதை ஆகிறது. இரவு நேரங்களில் சாலையை ஒட்டி உள்ள கால்வாய் இருப்பதை வாகன ஓட்டிகள் அருகில் வந்தால் மட்டுமே காண முடியும்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட உயிர் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பு கம்பி அல்லது தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த ரோட்டை கடந்து செல்கின்றன. ஏற்கனவே தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு ரோட்டின் ஒரு பகுதி மேடு பள்ளமாகவே காணப்படுகிறது.
இதனை தவிர்க்க ஒரு பகுதியில் மட்டும் வாகன ஓட்டிகள் சமாளித்து செல்லும் நிலையில் எதிரில் வாகனங்கள் வரும்போது வேறு வழி இன்றி ஒதுங்க வேண்டியதாகிறது. டிராக்டர், கார், ஆட்டோ, டூவீலர்கள், பஸ் என அனைத்து வாகனங்களும் ஓடையில் பாய்ந்து உள்ளது. இதற்கு காரணம் தடுப்பு அமைப்பு இல்லாதது. விபத்து உயிர் பலிகளை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.