/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்
/
ஸ்ரீவி., நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்
ஸ்ரீவி., நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்
ஸ்ரீவி., நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்
ADDED : ஜூலை 12, 2025 03:54 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கிருஷ்ணன் கோயில் வழியாக திருமங்கலம் செல்லும் நான்கு வழிச்சாலை பணிகள் முழு அளவில் முடிவடையாதநிலையில் வாகனங்கள் அதிவேகத்தில் வருவதாலும், இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வதாலும்விபத்துக்கள் ஏற்பட துவங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் நிலையை எட்டியுள்ளது. பல இடங்களில் மேம்பால பணிகள் மட்டுமே முடிவடைய வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையுள்ள நான்கு வழிச்சாலையில் பல கனரக வாகனங்கள், கார்கள், வேன்கள், போன்ற வாகனங்கள் அதிவேகத்தில் வந்து விபத்தில் சிக்கும் நிலை கடந்த சில நாட்களாக ஏற்பட துவங்கியுள்ளது.
இதில் இளைஞர்களும் அதிவேகத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். நேற்று முன்தினம் ஒரு கார் கவிழ்ந்து நான்கு பேர் காயமடைந்தனர். டூவீலரில் சென்ற எஸ்.ஐ. ஒருவர் தவறி விழுந்து பலியானார்.
இதில் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிக்கின்றன.
இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கும் போது வேகத்தை கட்டுப்படுத்தாமல் விபத்து ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.