/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேவர் ஜெயந்திக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள்
/
தேவர் ஜெயந்திக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள்
ADDED : அக் 20, 2024 06:33 AM
விருதுநகர் : தேவர் ஜெயந்தியில் மரியாதை செலுத்த விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் பசும்பொன் போகும் வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி, மருது சகோதரர்கள் நினைவு தினத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் எஸ்.பி., கண்ணன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் உள்பட அலுவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர், துாத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்களில் செல்பவர்கள் அருப்புக்கோட்டை, காந்தி நகர், ராமலிங்கா மில், கல்லுாரணி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, கமுதி விலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று திரும்ப வேண்டும்.
ஆவியூர், காரியாப்பட்டி, மல்லாங்கிணர், கல்குறிச்சியில் இருந்து செல்பவர்கள் கல்குறிச்சி, பாலையம்பட்டி பைபாஸ், காந்தி நகர், ராமலிங்கா மில், கல்லுாரணி, எம்.ரெட்டியப்பட்டி, மண்டபசாலை, கமுதி விலக்கு, கமுதி வழியாகவும், திருச்சுழியில் இருந்து ராமலிங்கா மில், கல்லுாரணி, கமுதி விலக்கு, கமுதி, பசும்பொன், நரிக்குடியில் இருந்து வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனுார், அபிராமம் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.
திரும்பும் போது பசும்பொன், கோட்டைமேடு, நகரத்தார்குறிச்சி, அபிராமம் வழியாக பார்த்திபனுார், பிடாரிசேரி, வீரசோழன் விலக்கு வழியாக வர வேண்டும். தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்த வாகனங்களில் செல்ல விரும்புபவர்கள் அக். 23க்குள் ராமநாதபுரம் கலெக்டரிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.வாகன அனுமதி சீட்டு முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.
வாடகை, திறந்த வெளி வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. ஒலி பெருக்கிள், மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது. தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் பிளக்ஸ் போர்டு, தோரண வளைவுகள் வைக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.