sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மிகவும் எளிமையான தமிழ்த்தேர்வு; 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி

/

மிகவும் எளிமையான தமிழ்த்தேர்வு; 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி

மிகவும் எளிமையான தமிழ்த்தேர்வு; 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி

மிகவும் எளிமையான தமிழ்த்தேர்வு; 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி


ADDED : மார் 29, 2025 06:40 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; தமிழகத்தில் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், முதல் தேர்வான தமிழ்த் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

எளிமையான வினாக்கள்


சஞ்சய், பி.பி.வி., சாலா மேல்நிலைப்பள்ளி, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை

தமிழ் பாட தேர்வு எளிமையாக இருந்தது. எதிர் பார்த்த வினாக்கள் வந்திருந்தன. பாட புத்தகத்தில் இருந்த வினாக்கள் தான் கேட்கப்பட்டிருந்தன. 1, 2, 3 மதிப்பெண் வினாக்கள் எளிமை. தெரிந்த, பயிற்சி எடுத்த தலைப்பில் கட்டுரைகள் கேட்கப்படிருந்தன. புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வினாக்கள் எளிமையாக இருந்தன. யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. வினாவை படித்த உடன் பதில் எழுதலாம். தெரிந்த வினாக்களுக்கு பதில் எழுதினாலே பாஸ் ஆகி விடலாம். எளிதில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க கூடிய அளவில் தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது.

அதிக மதிப்பெண் வாங்கலாம்


வெண்ணிலா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி காரியாபட்டி

தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் இருந்தது. 1, 2, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்துக்கும் ஒன்று விடாமல் பதில் எழுதி இருக்கிறேன். பெரும்பாலான கேள்விகள் புத்தகத்திலிருந்து வந்தது. ஒரு சில கேள்விகள் மட்டுமே பொதுவாக கேட்கப்பட்டிருந்தது. இருந்தாலும் எளிமையாக இருந்ததால் 100 க்கு 100 மதிப்பெண்கள் எளிதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

புத்தகத்திலிருந்தே கேள்விகள்


அருள் அழகன், எஸ்.எச்.என். எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்துார்

தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் இரு மதிப்பெண் மூன்று மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. பகுதி 4ல், 5 மதிப்பெண் கடிதம் எழுதுக வினா பொது அறிவுக் கேள்வியாக இருந்தது. சிந்தித்து பதிலளிக்கும் படியாக இருந்தது. பகுதி 5ல் 8 மதிப்பெண் வினாக்கள் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டிருந்ததால் எளிதாக எழுத முடிந்தது.சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் கேட்கப்பட்டது போல இந்த ஆண்டும் கல்பனா சாவ்லா குறித்து கட்டுரை கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் கேள்வி தாளில் வந்ததால் தமிழ் தேர்வு மிக எளிதாகவே இருந்தது. மெல்ல கற்கும் மாணவர்களும் 50 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறமுடியும். என்றார்.

மகிழ்ச்சியாக இருந்தது


-தனஸ்ரீ, ஸ்ரீவி., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார்

ஒரு வார்த்தை வினாக்கள் முதல் நெடு வினா வரை அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்தது. ஏற்கனவே பள்ளி தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளே பெரும்பாலும் வந்திருந்ததால் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது.

முதல் முதலாக அரசு பொதுத்தேர்வு எழுத செல்லும் நிலையில் கஷ்டமாக இருக்கும் என பலர் பயமுறுத்திய நிலையில் பொது தேர்வு வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினோம். 100க்கு 100 மதிப்பெண்கள் அதிக மாணவர்கள் பெறுவார்கள்.

சீனியம்மாள், தமிழாசிரியர், ஸ்ரீவித்யா மெட்ரிக் பள்ளி, விருதுநகர்

வினாத்தாள் எளிமையாக இருந்தது. புத்தகத்திற்கு பின்னால் உள்ள வினாக்களே அதிகம் கேட்கப்பட்டதால் மாணவர்கள் எளிதாக விடையளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்களில் சவாலான வினாக்கள் என எதுவும் இல்லை. நன்றாக தயார் செய்த மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கவே வாய்ப்புள்ளது. முதல் முறையாக அரசு தேர்வு எழுதும் இம்மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே சென்றனர். தேர்வு முடிந்ததும் மகிழ்ச்சியாக திரும்பிய போதே நாங்கள் புரிந்து கொண்டோம்.






      Dinamalar
      Follow us