/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம்
/
இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம்
ADDED : ஜூன் 17, 2025 05:04 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே உதவி கால்நடை மருந்தக கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை செய்ய பயப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சுக்கிலநத்தம் ஊராட்சி . இங்கு 2017 ல், நபார்டு வங்கியின் உதவியுடன் 23.10 லட்சம் நிதியில் அரசு கால்நடை மருந்தக கட்டடம் கட்டப்பட்டது. உள்ளூர், மீனாட்சிபுரம், அருணாச்சலபுரம், திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம், ஆமணக்குநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சைகள் செய்யவும் மருந்துகள் வாங்கவும் பயனுள்ளதாக இந்த மருந்தகம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் தங்களுடைய ஆடு, கோழி, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் பெற இங்கு வருவர்.
ஆனால் மருந்தக கட்டடம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. மேலும் கட்டடம் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிமெண்ட் பூச்சுபெரும்பாலும் உதிர்ந்தும் செங்கல் வெளியில் தெரிந்த நிலையில் உள்ளது. தினமும் கட்டடத்தின் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகின்றது.
இதனால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மருந்தகத்திற்கு கொண்டுவர பயப்படுகின்றனர். கிராம விவசாயிகளுக்கு நல்ல பயன் அளிக்கும் இந்த மருந்தகத்தை மாவட்ட நிர்வாகம் மராமத்து பணிகள் செய்து சுற்றிலும் உள்ள புதர்களை அப்புறப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.