ADDED : அக் 02, 2025 11:12 PM

ராஜபாளையம்; ராஜபாளையம் சுற்றுவட்டார கோயில்களில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனும் ஏடு துவங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளன்று பள்ளி வகுப்பறைக்கு செல்வதற்கு முன் சிறு குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயிலில் காலை 8:00 மணி முதல் இளம் குழந்தைகள் கல்வி கடவுள் ஆன சரஸ்வதியை வணங்கி பெற்றோருடன் கூடினர்.
கோயில் தலைமை அர்ச்சகர் வேத மந்திரங்களை பாடி வழிபட்டு ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் கொண்டு வந்த தட்டில் அரிசியை நிரப்பி அ, ஆ என விரல் பிடித்து உச்சரித்தபடி எழுதினர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தங்கள் கல்வியை தொடங்கினர்.
இதேபோல் பழைய பாளையம் ராமசாமி கோயில், தெற்கு வெங்காநல்லுார் சாரதாம்பாள் கோயில், சொக்கர் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்கினர்.